தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6 மற்றும் 7ம் தேதியில் மழை பைய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அந்த குறிப்பில் 6 மற்றும் 7ம் தேதிகளில் வடகிழக்கு காற்றலை காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.