புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த 30ஆம் தேதி துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி திடீரென அந்த சிறுவன் உயிரிழந்தார்.
இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சிறுவனின் உடல் அடக்கம் செய்வதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நார்த்தமலை அருகில் பொம்மாயடிமலை, கீரனூர், நகரில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.