Categories
தேசிய செய்திகள்

போலீஸ் வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து…. 3 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலம் பியூர் மோர் பகுதிக்கு உள்பட்ட போலீஸ் நிலையத்தில் காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பியூர் மோர் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த 3 போலீசார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்த மீட்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து போலீசாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |