Categories
மாநில செய்திகள்

சென்னையில் 15 இடங்களில் உடற் பரிசோதனை மையங்கள்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று தமிழகத்தில் 1,728 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை செய்ய பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்திருந்தார்.

அதன் படி திருவொற்றியூர், மணலி, மாதாபுரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.விக.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

Categories

Tech |