நாடு முழுவதும் 6 ஆயிரம் என்ஜிஓ க்களின் எஃப் ஆர் சி ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் எஃப் ஆர் சி ஏ எனப்படும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதனிடையே அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் சில தினங்களுக்கு முன்பு முடக்கப்பட்டன. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர் கூறுகையில் எஃப் ஆர் சி ஏ உரிமத்தை புதுப்பிக்கக் கோரி நாங்கள் கொடுத்த மனுவை உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது. இதனால் நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது 6000 என்ஜிஓ களின் எஃப் ஆர் சி ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 22762 என்ஜிஓ க்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றின் எஃப் ஆர் சி ஏ உரிமங்கள் காலாவதியாகிவிட்டன. இவற்றைப் புதுப்பிக்க பலமுறை கடிதம் அனுப்பியும் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமம் பெற்ற என்ஜிஓ க்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து829 ஆக குறைந்துள்ளது.