பிரிட்டனில் கொரோனா வைரஸ் பிளான் பி கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் Aylesbury-ல் உள்ள தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த போது தடுப்பூசி மற்றும் அறிவியலால் நாடு தற்போது வலு பெற்றிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணுவது முற்றிலும் முட்டாள்தனமானது. தொடர்ந்து நாட்டில் பிளான் பி கட்டுபாடுகள் அமலில் இருக்கும் என்றார்.
அதேபோல் மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தற்போது அமலில் உள்ள பிளான் பி கட்டுப்பாடுகள் சரியானதாக இருக்கும். அதேபோல் மூன்றாவது தவணை தடுப்பூசி நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.