தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் என்ற புதிய வைரசும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டி தேர்வு பயிற்சி மையம் மூடப்பட்டது.