Categories
மாநில செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவ்யா ஸ்ரீ  என்ற சிறுமி கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இந்நிலையில் காலை வழக்கம்போல் மாணவி அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றதால், நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்து மாணவி கீழே இறங்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் நிலைதடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மாணவி நவ்யா ஸ்ரீ பலத்த காயமடைந்தார். இதையடுத்து மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |