வெறிநாய் கடித்தால் 28 செம்மறி ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங் குளத்துப்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்தில் பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை அடைத்துவிட்டு காளியப்பன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது செம்மறி ஆடுகள் ஆங்காங்கே இறந்து கிடந்ததை கண்டு காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். சுமார் 28 செம்மறி ஆடுகள் வெறிநாய் கடித்தால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மறி ஆடுகள் இறந்ததால் காளியப்பன் மிகுந்த சோகத்தில் உள்ளார்.