Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னோட சாய்ஸ் ரிஷப் பண்ட் தான்” ….முன்னாள் வீரர் ஓபன் டாக்….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது .இதனால் பலரும் துணைக் கேப்டனாக ரிஷப் பண்டை நியமிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் விக்கெட் கீப்பர்  சபா கரிம், கூறும்போது,” பும்ரா  துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன் .நான் எதிர்பார்க்கவே இல்லை.அதேசமயம் அணியில் ரிஷப் பண்ட் அனைத்து வடிவிலான போட்டியிலும் விளையாடி வருவதால் துணை கேப்டனாக அவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தேன். இதில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார். அதோடு போட்டி குறித்து அதிக அளவில் தெரிந்து வைத்துள்ளார். இதனால் என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தான் எனது முதல் சாய்ஸ் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |