பிரான்சில் புதியதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பிரான்சில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், இந்த புதிய வைரஸ் 46 உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது. எனவே, இது அதிக பரவும் திறனை கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் Marseille என்னும் நகரத்தில், தற்போது வரை புதிதாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 12 பேருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதில் முதல் நபராக ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று வந்த நபர் தான் இருக்கிறார். கடந்த மாதம் 10ஆம் தேதியன்று இந்த தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும் அதற்குப் பின் இந்த வைரஸ் வேகமாக பரவவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தொற்று, வேறு எந்த நாடுகளிலும் தற்போது வரை கண்டறியப்படவில்லை. உலக சுகாதார மையமும், தற்போது வரை இதனை சோதனை செய்ததாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.