Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் போன்று உடை அணிந்தவர்களிடம் ஆசி பெற்று வேட்புமனு தாக்கல்…!!

திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்கள் உடன் வந்து வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தது புதுமையாக இருந்தது.

தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தென்னரசு என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும், தான் நேர்மையானவன் என்ற செய்தியை மக்களுக்கு அளிக்கும் வகையிலும் திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்களை உடன் அழைத்து வந்தார்.

Image result for வேட்புமனு தாக்கல்

பின்னர்,அவர்கள் தென்னரசுக்கு மாலை அணிவித்து ஆசீர்வாதம் செய்தனர். இந்த காட்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

Categories

Tech |