தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா உயர்வு மற்றும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காலை 11 மணியளவில் ஆலோசனையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதித்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டு தலங்களை மூட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.