Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : 4-வது டெஸ்ட் போட்டிகான….ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு ….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான  4-வது டெஸ்ட் போட்டிகான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3  போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது .

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ட்ராவிஸ் ஹெட்டிற்கு பதிலாக அணியில் உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேம்ரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.

Categories

Tech |