Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல் கருகி இறந்த மாணவி…. 50 பேரிடம் தீவிர விசாரணை…. சி.பி.சி.ஐ.டி போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

உடல் கருகி இறந்த பள்ளி மாணவியின் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் 50 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பிரித்திகா கடந்த மாதம் 15-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் இறப்பில் எந்த விவரமும் வெளிவரவில்லை.

இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 50 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப் போவதாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |