Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. இனி உங்கள் குடும்பத்தினருக்கும்…. சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்பீடு அட்டையில் கூடுதல் இணைப்பு வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இந்த காப்பீட்டு அட்டையில் தற்போது கூடுதல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது இந்த திட்டத்தில் பயன்பெறும் அரசு ஊழியரின் மகன் அல்லது மகள் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகவும் திருமணமாகாதவர்கள் ஆகவும் இருந்தால் அவர்களுக்கும் இந்த காப்பீடு அட்டை செல்லுபடியாகும் என்பதாகும். இதனால் ஊழியர்களோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரும் பயன்பெறுவர் என அரசு அறிவித்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய காப்பீடு அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |