Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று சந்தேகம் எழுந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20-ஆம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் செய்முறை தாள் பாடங்களுக்கு 225 ரூபாய் கட்டணம் என்றும் செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாய் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |