Categories
அரசியல்

அதென்ன தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓர வஞ்சனை…. ? இது சரியில்ல….! மத்திய அரசை சீண்டிய வேல்முருகன்….!!!

தமிழ்நாட்டிற்கு மட்டும் மழை வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்திருக்கிறது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் வாழ்வுரிமை கட்சி தலைவரான பண்ருட்டி வேல்முருகன் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.

திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நெற்கதிர்கள் சம்பா அறுவடைக்கு தயாரான நிலையில், அவை சேதமடைந்தது. தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களும் அதிகளவில் இழப்புகளை சந்தித்தது.

விவசாயிகள் ஏற்கனவே நடந்த பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் பெய்த மழை மேலும் விவசாயிகளுக்கு கடும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், பொங்கல் பண்டிகை வரக்கூடிய இந்த சமயத்தில் இவ்வாறான பாதிப்புகள் நடந்துகொண்டிருப்பது வேதனையை தருகிறது.

ஒன்றிய அரசு, தமிழகத்திலிருந்து அதிக வருவாயை பெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த தமிழகத்திற்கு நிவாரணத்தொகை அளிக்கப்படவில்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மோடி அரசாங்கம் பிற மாநிலங்களின் மக்கள் குறித்தும், அங்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்  சிறிதும் கவலைப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனை செய்கிறது, இதனை கடுமையாக கண்டிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |