பிரதமர் நரேந்திர மோடி திமிர் பிடித்தவர் என்று மேகாலய ஆளுநர் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக், பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற சமயத்தில், நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவரிடம், விவசாயிகள் போராட்டத்தில் 500க்கும் அதிகமானோர் பலியானதாக கூறினேன்.
घमंड…क्रूरता…संवेदनहीनता
भाजपा के राज्यपाल के इस बयान में पीएम मोदी के व्यक्तित्व में शामिल इन्हीं 'गुणों' का बखान है।
मगर, ये एक लोकतंत्र के लिए चिंता की बात है। pic.twitter.com/HGxzKfYsme
— Congress (@INCIndia) January 3, 2022
அதற்கு மோடி, “எனக்காகவா அவர்கள் பலியானார்கள்?” என்று திமிருடன் கூறினார். எனினும், நான் விடாமல், நீங்கள் தலைவராக உள்ளதால் தான் அவர்கள் பலியானார்கள் என்று கூறினேன். இதில் எனக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. நான் அவரோடு சண்டையிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், நான் விவசாயிகளுடன் எப்போதும் இருப்பேன். இதனால் என்னை பதவியை விட்டு விலகுமாறு கூறினாலும் அஞ்ச மாட்டேன் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிடப்பட்டிருக்கிறது.