ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதரவாகவும், வன்முறைகளை கண்டித்தும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹாங்காங்கில் கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும் கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் பல மாதங்களாக நடைபெறும் போராட்டம் பெரும்பாலான நேரங்களில் வன்முறைகளில் முடிந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இந்த வன்முறை போராட்டங்களை கண்டித்து ஹாங்காங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தாமார் பூங்காவில் கூடிய மக்கள் காவல்துறைக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சீனாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் அதன் தேசிய கொடிகளை அசைத்து உற்சாக முழக்கமுமிட்டனர்.