ரயில் முன் படுத்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே படுத்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் சைகையால் அவரை தள்ளி போகும்படி கூறியும் அந்த நபர் எழுந்திருக்கவில்லை. இதனால் அந்த நபர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர் தேங்காய் வியாபாரியான முகமது என்பது தெரியவந்துள்ளது. மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் தொல்லையாலும் முகமது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.