குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் உள்ள கோக்னி கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது பெற்றோருடன் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த தேவாலயத்தில் 39 வயதுடைய பலிராம் எனபவர் மதபோதகராக இருக்கிறார். இந்நிலையில் தேவாலயத்திற்கு அடிக்கடி சென்று வந்த சிறுமியை, பலிராம் தனியாக வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை மதபோதகர் மற்றும் அவரது மனைவி அனிதா தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து வைத்து சிறுமியை மிரட்டியுள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி மீண்டும் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மதபோதகர் பலிராம் மற்றும் அவரின் மனைவி அனிதாவை காவல்துறையினர் கைது செய்தனர். மத நம்பிக்கையில் சென்ற 16 வயது சிறுமியை மதபோதகரே பாலியல் வன்புணர்வு செய்ததுடன், இந்த கொடூர சம்பவத்துக்கு உடந்தையாக அவரின் மனைவி வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.