தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து அத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. திரையரங்குகளில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அஜித் ரசிகர்கள் அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வலிமையின் ட்ரைய்லர் வெளியிடப்பட்டது. வலிமை படத்திற்கு தணிக்கை குழுவில் இருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இந்த 750 தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வலிமையின் அனுபவத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் பெறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.