உலகத்தில் பல்வேறு விதமான பட்டப்படிப்புகள் இருக்கிறது. கல்விப் பட்டம் என்பது பொதுவாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியில் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு தகுதி ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுவாக பல்வேறு நிலைகளில் பட்டங்களை வழங்குகின்றன.
இந்நிலையில் யாரும் இதுவரை காணாத ஒரு பட்டப்படிப்பை பிரான்ஸில் உள்ள போ லில்லில் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது, உண்பது, குடிப்பது மற்றும் வாழ்க்கை குறித்து கற்பதற்காக ‘Drinking, Eating & Living’ என்ற முதுநிலை பட்டப்படிப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.