Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு…. பிறவிப் பயனை அடைந்துவிட்டேன்…..!! ரசிகை நெகிழ்ச்சி…!!!

நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் பெற்றதன் மூலம் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக அவரது ரசிகை உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் ஒளிப்பதிவாளரான இவரும் இவரது மனைவி ஜெகதீஸ்வரியும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரி ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்து வந்திருக்கிறது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற பல மாதங்கள் முயன்ற ராகவா விக்னேஷ் இறுதியில் தமது நண்பர் மூலம் ரஜினியை சந்தித்து உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியுடன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விக்னேஷ் பெருமிதம் தெரிவித்தார்.

Image result for நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு

சிறு வயதிலிருந்தே ரஜினியை சந்திக்க ஆசை இருந்ததாக கூறிய ஜெகதீஸ்வரி அவரை தான் அப்பா என்றே அழைத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் பெற்றதன் மூலம் தான் பிறவிப் பலனை அடைந்து விட்டதாகவும் ஜெகதீஸ்வரி உணர்வுபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |