Categories
சினிமா

“தாங்க முடியல்ல!”…. கேவலமாக நடந்துக்குறாங்க…. கடுப்பான பிரபல இயக்குனர்….!!

ஒரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் பேரரசு, ரீல்ஸ் என்ற பெயரில் கேவலமாக நடந்துகொள்ளும் பெண்களை விமர்சித்திருக்கிறார்.

“பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே” என்னும் திரைப்படத்தை ரெயின்போ புரோடக்சன்ஸ் சார்பாக வரதராஜ் தயாரித்திருக்கிறார். அவர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இன்னிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றால் நாட்டில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியவில்லை. மேலும் சில பெண்கள் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பேசுகின்ற பேச்சும் தாங்க முடியாத வகையில் இருக்கிறது. குறிப்பாக ஒரு செயலியில், பெண்கள் இருவர் செய்யும் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருக்கிறது.

அவர்களைப் பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும். நாட்டில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளுக்கு செல்போன்கள் தான் முக்கிய காரணம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கக்கூடாது. பெற்றோர்கள் அதனை புரிந்து கொண்டு கவனமுடன் நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |