Categories
கிரிக்கெட் சென்னை மாவட்ட செய்திகள் விளையாட்டு

பொல்லார்டை தகாத வார்த்தையால் திட்டிய ஹிட்மேன்!

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய வீரர் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டை தகாத வார்த்தையால் தீட்டிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியது.

சென்னை சேப்பாம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனிடையே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டை தகாத வார்த்தையால் திட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் தென்பட்டுவருகிறது. ஆட்டத்தின் ஏழாவது ஓவரின் போது இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஸ்ட்ரைக்கரிலிருந்த கே.எல்.ராகுல் ரோஹித்திடம் விசாரித்துள்ளார். அப்போது, ரோஹித் சர்மா பொல்லார்ட்டை தகாத வார்த்தையில் குறிப்பிட்டு கே.எல்.ராகுலிடம் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடிவரும் ரோஹித் சர்மா பொல்லார்ட் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். அந்தவகையில், இச்சம்பம் இருவருக்கும் எந்தவித மனக்கசப்பை ஏற்படுத்தபோவதில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

Categories

Tech |