Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்ன விட்டு போய் 5 வருஷம் ஆச்சு” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனச்சேரி கவுண்டர் பண்ணை பகுதியில் விவசாயியான பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் இருவரும் 5 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த பூபதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த பூபதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |