Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிராமத்து வழக்கு மொழியில் பேசி தொந்தரவு…. அதிர்ச்சியடைந்த மாணவிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் காலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 86 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியரான ராஜமாணிக்கம் என்பவர் பாலியல் தொடர்பான பாடங்களை எடுக்கும் போது கிராமத்து வழக்கு மொழியில் பேசி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் பள்ளியில் திரண்டனர்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் இந்த பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர் ஒருவர் இதுபோன்று பிரச்சனை தொடர்பாக தாக்கப்பட்டதை அறிந்த ராஜமாணிக்கம் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தலைமறைவான ராஜமாணிக்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |