நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது ஒன்பது படங்களை கைவசம் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ஆம் வருடத்தில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான 100 என்ற திரைப்படத்தில் தான் அவர் கடைசியாக நடித்திருந்தார்.
மேலும் அவர் நடித்திருக்கும், மகா திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த 2022 ஆம் வருடத்தில் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார். ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 மினிட்ஸ், பார்ட்னர், ஹாட்ஸ்டார் ஒரிஜினல் மற்றும் வாலு திரைப்படத்தை இயக்கிய விஜய் சந்தருடன் மீண்டும் இணைகிறார்.
மேலும், இயக்குனர் ஆர்.கே கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், உட்பட பல படங்களில் நடிக்கிறார். இது தொடர்பில் ஹன்சிகா மோத்வானி தெரிவித்திருப்பதாவது, “கடந்த வருடம் அனைவருமே சவாலை சந்தித்தோம். இதில் குறிப்பாக திரையுலகம் கடினமான சூழ்நிலைகளை சந்தித்தது. ஆனால், 2022ஆம் புத்தாண்டில் அனைத்து மக்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது.
இந்த கடும் சூழ்நிலையில், எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து மக்களின் அன்பிற்கும் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களது அன்புதான் உலகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. நான் நடிக்கும் 9 திரைப்படங்கள் குறித்து உங்களிடம் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த வருடத்தில், அனைவரின் கனவுகள் மற்றும் இலக்குகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.