பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திர பிரதேசம் ,உன்னாவ் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அவதேஷ் சிங் என்பவன் என்னை பாலியல் ரீதியில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டர் என தீக்குளித்த பெண் புகார் அளித்துள்ளார் , இந்நிலையில் வழக்கு பதியப்பட்ட நிலையில் அவதேஷ் சிங் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்
.இதனால் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக உன்னாவ் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் அறிவித்துள்ளார் . மேலும் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெரும் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது .