Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீன் பிடிப்பதற்காக வீசிய வலை…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வனத்துறையினரின் முயற்சி…!!

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி தொண்டைமான் குளம் கண்மாய் பகுதியில் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். இந்நிலையில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கிக்கொண்டது. இதுகுறித்து மாரியப்பன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் இருக்கும் சாஸ்தா கோவில் அணைக்கட்டு பகுதியில் இருந்து வெளியேறும் நீரானது கண்மாய்க்கு வருகிறது. இங்க மீன்பிடிப்பதற்காக வீசப்படும் வலையில் அடிக்கடி மலைப்பாம்பு சிக்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |