Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

WHATSAPP- ல் அனுப்பிய வீடியோ…. தூக்கில் தொங்கிய தலையாரி…. விருதுநகரில் பரபரப்பு…!!

தலையாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளிமடம் பகுதியில் விநாயக சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம தலையாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் எனது குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைக்கு பள்ளிமடத்தை சேர்ந்த பலர் தான் காரணம் என்றும், அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் விநாயக சுந்தரம் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ பதிவை விநாயக சுந்தரம் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களிலும் அனுப்பியுள்ளார்.

அதன்பின் விநாயக சுந்தரம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விநாயக சுந்தரத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |