டெல்லியில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டெல்லி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதனால் டெல்லியில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்வதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலால் 50% அனுமதி என்ற உத்தரவை வாபஸ் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் 100% பயணிகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது