வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் உட்பட பலர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு 292 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆர்.கே பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், எம்.எல்.ஏ. தமிழரசி, ரவிக்குமார் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
மேலும் வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும். மேலும் நாடாளுமன்றத்தில் அவரது சிலையை வைப்பதற்காக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன் கூறியுள்ளார்.