Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்…. ஒமிக்ரானுக்கு இடம் கொடுக்காதீர்கள்…. எச்சரிக்கும் விஞ்ஞானி…..!!

பிரிட்டனில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது ஒமிக்ரானுக்கு வாய்ப்பாக அமையும் என்று பிரபல விஞ்ஞானி மற்றும் பேராசிரியரான நீல் பெர்குசன் கூறியிருக்கிறார்.

பிரிட்டன் நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையில் பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயமாக வகுப்பறையில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை பள்ளிகளில் ஒமிக்ரான் தொற்று பரவ வாய்ப்பில்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது நிலையை மாற்றிவிடும். சமீபத்தில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு டெல்டா வகை தொற்று அதிகமாக பரவியது.

ஆனால், ஒமிக்ரான் பரவிவரும் நிலையில் பள்ளிகள் அடைக்கப்பட்டது. எனவே குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது அதிக தொற்று பரவ வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் ஒமிக்ரானின் தீவிரம் குறைவாகத்தான்  உள்ளது என்பது நல்ல செய்தியே என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |