சேலம் மாவட்டம் முறுக்கபட்டி ஊராட்சியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 9-ஆம் தேதியில் இருந்து இன்று மாலை வரை தமிழகத்தின் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அந்த வகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அதாவது முறுக்கபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பொறுப்புகாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.மேலும், அந்த மூதாட்டி இதற்குமுன் ஐந்து ஆண்டுகள் பதவில் இருந்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.