Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கதாநாயகனாக….. களமிறங்கும் பிரபல சீரியல் நடிகர்…. வெளியான மாஸ் தகவல்….!!!

படங்களில் கதாநாயகராகவும் சீரியலில் நடிகராவும் வலம் வரும் பிரஜன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

முதன்முதலாக தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக சீரியலில் கால்பதித்து பின்னர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக கவனம் ஈர்க்கப்பட்ட பிரஜன் தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஹாசினி நடிக்க போகிறாராம்.

இந்த புதிய படத்தை சீயோன் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் குஹாசினி மற்றும் பிரஜனுடன் கே.ராஜன், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்க உள்ளார்களாம். அதேபோல் கலை இயக்குனராக முஜிபுரும், ஒளிப்பதிவாளரா ஜிஜுவும் பணியாற்றுகின்றனர்.

இந்த படத்தை இயக்கும் சீயோன் காதல், அரசியல், நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் மாபின்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிப்பில் உருவாக்கப்படுகிறது.

Categories

Tech |