Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் மேளம்…. பிரதமர் மோடி போட்ட தாளம்…. வைரல்….!!!!

பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபுரா-வுக்கு சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மணிப்பூரில் 4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தலைநகர் இம்பாலில் ரூபாய் 1,850 கோடியில் 13 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் திறந்து வைத்தார்.

இதையடுத்து மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மேளதாளங்களுடன் பாரம்பரிய இசைக்கருவிகளாளும் வரவேற்றனர். அப்போது மேளம் வாசித்தவரிடம் இருந்து மேளத்தை வாங்கிய மோடி அதில் தாளம் போட்டு மகிழ்ந்தார். மேளதாளத்தின் மீது தனி பற்றுக்கொண்ட மோடி சீனா, சுவிட்சர்லாந்து என எங்கு சென்றாலும் அங்குள்ள மேளத்தில் ஒரு தாளம் போடாமல் திரும்பி வருவதில்லை.

Categories

Tech |