மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தடைப்பட்டுவந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலனையே கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள், அது போதும். தொழில் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். அதாவது லாபத்திற்கு எந்த வித குறையும் இல்லை. உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
நல்ல முன்னேற்றமான சூழலும் இருக்கும். இன்று வீடு வாங்கக் கூடிய, சொத்து வாங்க கூடிய நல்ல சூழ்நிலையும் இருக்கு. கூடுமானவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாகனம் வாங்க கூடிய சூழலும் இன்று இருக்கு. இன்று குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் கணவன் மனைவிக்கிடையே இன்று அன்பு இருக்கும் இன்று காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கு. காதலர்களுக்கு இன்று அன்னோன்யம் கூடுதலாக இருக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இருக்கு. உத்தியோகத்தில் நல்ல உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடும்.
அதுபோலவே உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான சூழலும் இன்று இருக்கு. மாணவர்கள் கல்வியில் சிறப்பான அந்தஸ்தை பெற முடியும். கல்வியில் இருந்த தடைகள் விலகி, இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்