ஆஸ்திரேலியாவில் தென்பட்ட நடக்கும் திறன் கொண்ட மீன் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 22 வருடங்கள் கழித்து pink hand fish என்ற துடுப்புகளை பயன்படுத்தி நடக்கக்கூடிய திறனுடைய அரியவகை மீன் மீண்டும் தென் பட்டிருக்கிறது. இதற்கு முன், கடந்த 1999-ஆம் வருடத்தில் தான் இந்த மீன் இறுதியாக காணப்பட்டிருக்கிறது.
எனினும், கடந்த சில தினங்களுக்கு முன், டாஸ்மானியா என்னும் தீவின் கடற்கரை பகுதியில் இவை காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முன்பு காலத்தில் இந்த மீன்கள் அதிகம் காணப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, இந்த மீன் இனம் வெகுவாக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.