இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்ய உள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன. இந்த மாத்திரைகளை தீவிர கொரோனா பாதிப்பு இருபவர்களுக்கு பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மாத்திரையின் விலை 35ரூ என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாநிலங்களுக்கு இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையில் 5 நாட்கள் சிகிச்சைக்கு மொத்தம் 40 மாத்திரைகள் தேவைப்படும். ஆகவே 40 மாத்திரைகளின் விலை 1,400 ரூபாய் ஆகும். இந்த மாத்திரைகளை 2 தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் பயன்படுத்தலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.