Categories
மாவட்ட செய்திகள்

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்…..!!

சென்னையில் ஒரு இளைஞர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மாவட்டத்தில் இருக்கும் வளசரவாக்கம் பகுதியில், வசித்த கேரள மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் என்ற இளைஞர் திடீரென்று, தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள், அர்ஜுனின் வீட்டிற்கு சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், அந்த இளைஞன் தன் கைப்பட எழுதிய கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது, “எனக்கு வாழ விருப்பமில்லை. அனைவரும் இருந்தும்,  நான் தனியாகத்தான் உள்ளேன். என் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. என் கடைசி ஆசை, என் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் அப்படியே என் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்”என்று என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், ஒரு பெண்ணே அர்ஜுன் காதலித்ததாகவும், அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரின் வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் அவரின் வீட்டிலிருந்து, சென்ற பின்பு தான், அர்ஜுன் தற்கொலை செய்தார் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |