ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் சக தோழியர் இருவருடன் ஆடு மேய்க்கச் சென்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சிறுநீர் கழிக்க மறைவாக சென்றபோது அவர் திடீரென காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் தேடியபோது சிறுமி ரத்தம் வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடையே காவல் கண்காணிப்பாளர் ஜெய் யாதவ் கூறியதாவது, “நான் இதுவரையில் இப்படியொரு மோசமான சம்பவத்தை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.
சிறுமியின் பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் சிறுமி 3 பேரின் வன்கொடுமை முயற்சியை எதிர்த்து போராடியிருக்கிறார். எனினும் அவர்கள் சிறுமியை தாக்கி இருக்கின்றனர். மேலும் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. சிறுமி இறந்த பின்பும் கூட குற்றவாளிகள் 3 பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். ஆகவே மிக மோசமான இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராகப்போவதில்லை என வழக்கறிஞர் சங்கமும் முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.