அமெரிக்காவில், பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு சில நிமிட இடைவெளி ஒரு வருட இடைவெளியாக மாறிய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ என்ற தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் பிறந்த நேரம் ஒரு வருட வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. அதாவது, இவர்களின் முதல் குழந்தை, கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு 11:45 மணியளவில் பிறந்தது.
அதன் பிறகு, அடுத்த குழந்தை, 12 மணிக்கு பிறந்தது. எனவே 15 நிமிடங்கள் இடைவெளி, குழந்தைகளுக்குள், ஓராண்டு வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. இது குறித்து மருத்துவர் கூறுகையில், “இது நான் பணியாற்றிய காலங்களில் மறக்க முடியாத நிகழ்வு” என்று கூறியுள்ளார்.
இது குறித்து பாத்திமா தெரிவித்துள்ளதாவது, “என் இரட்டை குழந்தைகள் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்திருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.