கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவில் ஜெயபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாக்யராஜ் என்ற வாலிபர் குடிபோதையில் செல்வகுமாரிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் பாக்யராஜ் செல்வகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த செல்வகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாக்யராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.