Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு உரிமம் வேண்டும்” வலையுடன் வந்த மீனவர்கள்…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மீன்பிடி வலையுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தில்லைமுத்து தலைமையில் மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடி வலையுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் அருகே 78 ஏக்கர் பரப்பளவுடைய கொங்கூர் இடைச்சியம்மன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் குத்தகைக்கு எடுத்து 200 குடும்பத்தினர் பிழைப்பு நடத்தி வருகிறோம்.

சமீபகாலமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளத்தில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமத்தை அதிகாரிகள் தனியாருக்கு கொடுக்கின்றனர். இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே கொங்கூர் குளத்தில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |