Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் டார்ச்சர் பண்றாங்க” கைக்குழந்தையுடன் வந்த பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினர் பறித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு எறையூர் பகுதியில் வசிக்கும் பழனியின் மனைவியான ராணி என்ற பெண் கைக்குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ராணி கொண்டுவந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் ராணி கூறியதாவது, எனது வீட்டுமனையை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் வீட்டுமனையை காலி செய்ய கோரி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |