மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுகிளாம்பாடி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் இருக்கும் பேக்கரியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சங்கர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பிரசாந்த் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். இவர்கள் நார்த்தாம்பூண்டி பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பிரசாந்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதனால் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த பிரசாந்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.