Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணியை எட்டி உதைத்த போலீசார்…. என்ன காரணமா இருக்கும்?…. வைரல்…!!

கேரளாவில் மாவலி எக்ஸ்பிரஸ் ரயிலானது தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் கர்நாடக மாநில மங்களூவுருக்கும் இடையே சேவையளிக்கக் கூடிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மங்களூரில் இருந்து திருவனந்தபுரதிற்கு வந்து கொண்டிருந்தபோது கன்னூரில் இருந்து பயணம் செய்த ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார். இதையடுத்து ரயிவே போலீசாரின் உதவியுடன் அந்த பயணியின் கைகளை கட்டி கழிவறை அருகில் கீழே உட்கார வைத்த நிலையில் போலீசார் தொடர்ந்து கால்களால் எட்டி உதைத்துள்ளார். அதன் பிறகு அந்த பயணி வடகரை ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை சக பயணி ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரவலாகி வருகிறது. இதற்கு தவறு செய்திருந்தால் சட்டப் படி தண்டனை பெற்றுத்தருவதை விட்டு எதற்காக ஈவு இரக்கம் இல்லாமல் பயணியை போலீஸ் அடிக்க வேண்டும் என்று பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஏ.எஸ்.ஐ பிரமோத் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அந்த பயணி குடித்துவிட்டு பயணிகளிடம் அநாகரிகமாக நடந்துள்ளார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |